அழகான வித்யா பாலனிடம் அட்வென்ச்சர் அதிகமாகவே இருக்கிறது. இல்லாவிட்டால், கேம்பிரிட்ஜுக்குப் படப்பிடிப்புக்குப் போனவர், சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகி அங்கேயே தங்கியிருப்பாரா?
பால்கி இயக்கி வரும் புதிய படம் பா. இதில் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், வித்யாபாலன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தில் படப்பிடிப்பு நடந்தது.
படப்பிடிப்பில் கலந்து கொண்ட வித்யா பாலன் திடீரென காணவில்லை. இதனால் படக்குழுவினர் குழப்பமாகி அந்த வளாகம் முழுவதும் தேடிப் பார்த்துள்ளனர். ஆனாலும் வித்யா சிக்கவில்லை.
இதையடுத்து வித்யாவைத் தேடும் பணியை விட்டு படக்குழுவினர் நாடு திரும்பி விட்டனர் (எவ்வளவு பொறுப்பு பாருங்க..)
சரி காணாமல் போன வித்யா என்ன ஆனார். எங்கேயும் போகவில்லையாம், அங்கேயே தங்கியிருந்திருக்கிறார். காரணம் - கேம்பிரிட்ஜின் அழகு அவரை அங்கிருந்து நகர விடாமல் தடுத்து விட்டதாம். இதனால் தான் படக்குழுவினருக்குக் கூடத் தெரியாமல் அங்கேயே ஒரு ரவுண்டு அடித்திருக்கிறார்.
இதை அவரே விளக்குகிறார்...
இதில் பயப்பட ஒன்றும் இல்லை. கேம்பிரிட்ஜின் கொள்ளை அழகு என்னைக் கட்டிப் போட்டு விட்டது. அங்கிருந்து போகக் கூடாது என்று எனது மனசு சொன்னது. எனவேதான் அங்கேயே தங்கி விட்டேன்.
வெறும் படப்பிடிப்புக்காகத்தான் கேம்பிரிட்ஜ் போனேன். ஆனால் அந்த வளாகத்தின் அழகு, சுற்றுச்சூழல் என்னை வெகுவாக ஈர்த்து விட்டது. இதனால் கையில் புத்தகத்துடன் என்னை ஒரு மாணவியாக பாவித்துக் கொண்டு சுற்றிச் சுற்றி வந்தேன்.
அதிர்ஷ்டவசமாக எனக்கு கேம்பிரிட்ஜில் ஒரு தோழி உள்ளார். அவருடனும், அவரது கணவருடனும் நான் அவர்களது இருப்பிடத்தில் தங்கிக் கொண்டேன். எனது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் அது.
என்னால் கேம்பிரிட்ஜில் எந்த இடத்தையும் வாங்க முடியாது. ஆனால் மும்பைக்கு அருகே கேம்பிரிட்ஜுக்கு நிகரான சூழல் உள்ள இடத்தைப் பார்த்து விட்டேன். அங்கு ஒரு இடத்தையும் வாங்கப் போகிறேன். அது எந்த இடம் என்பது சீக்ரெட் என்கிறார் வசீகரப் புன்னகையுடன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment